விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம் என தகவல் வெளியானது.
Instagram:kajalaggarwalofficial
காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது குழந்தை பிறந்துள்ளது.
Instagram:kajalaggarwalofficial
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே அல்லது கத்ரினா கைப் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் பரவியது.
Instagram:kajalaggarwalofficial
இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜல் அகர்வாலிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
Instagram:kajalaggarwalofficial
அதற்கு பதில் அளித்த காஜல் அகர்வால் “இந்தியன் 2 படத்தில் இருந்து நான் விலகியதாக யார் சொன்னது? அந்த படத்தில் இருந்து நான் விலகவில்லை. நாங்கள் இந்தியன் 2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் 13-ந்தேதி மீண்டும் தொடங்கப் போகிறோம்” என்றார்.
Instagram:kajalaggarwalofficial
இதையடுத்து இந்தியன் 2-ல் காஜல் அகர்வால் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகிறார்கள்.