உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி...!
AFP
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
AFP
‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
AFP
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெகுநேரம் நீடிக்கவில்லை.
AFP
அதன்பிறகு விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார்.
AFP
இறுதியில் 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்னில் சுருண்டது.
AFP
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.
AFP
இப்போட்டியில் ரோகித் சர்மா சிக்சர் மழை பொழிந்தார்.
AFP
கடைசியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
AFP
இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களும் எடுத்தனர்.
AFP
போட்டி தொடங்குவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
AFP
AFP
AFP
AFP
AFP