ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி...!
AFP
ஆட்டநாயகன் : கே.எல். ராகுல்
அக்டோபர் 8-ந்தேதி, இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
AFP
ஆட்டநாயகன் : ரோகித் சர்மா
அக்டோபர் 11-ந்தேதி, இந்தியா தனது 2வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
AFP
ஆட்டநாயகன் : பும்ரா
அக்டோபர் 14-ந்தேதி, இந்தியா தனது 3வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடியது.
AFP
ஆட்டநாயகன் : விராட் கோலி
அக்டோபர் 19-ந்தேதி, இந்தியா தனது 4வது லீக் போட்டியில் வங்காளதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
AFP
ஆட்டநாயகன் : முகமது ஷமி
அக்டோபர் 22-ந்தேதி, இந்தியா தனது 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
AFP
ஆட்டநாயகன் : ரோகித் சர்மா
அக்டோபர் 29-ந்தேதி, இந்தியா தனது 6வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
AFP
ஆட்டநாயகன் : முகமது ஷமி
நவம்பர் 2-ந்தேதி, இந்தியா தனது 7வது லீக் போட்டியில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
AFP
ஆட்டநாயகன் : விராட் கோலி
நவம்பர் 5-ந்தேதி, இந்தியா தனது 8வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டி எடுத்தது.
AFP
ஆட்டநாயகன் : ஸ்ரேயாஸ் அய்யர்
நவம்பர் 12-ந்தேதி, இந்தியா தனது 9வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
AFP
ஆட்டநாயகன் : முகமது ஷமி
நவம்பர் 15-ந்தேதி, இந்தியா அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
AFP
இந்திய அணி, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
AFP