2024-ல் பாரீஸ் ஒலிம்பிக்கில் சாதனை படைத்த இந்தியர்கள்!
மனு பாக்கர்: ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் முதல் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவின் பதக்க வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.
@bhakermanu
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப்பதக்கமும், கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத்சிங் உடன் இணைந்து மற்றொரு வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தினார்.
@bhakermanu
நீரஜ் சோப்ரா: பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
@neeraj____chopra
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், இந்த முறை பாகிஸ்தான் வீரரிடம் தங்கத்தை பறிகொடுத்தார்.
@neeraj____chopra
இந்திய ஆக்கி அணி: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணியும், ஸ்பெயின் அணியும் மோதின. அதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.
@harmanpreet_13
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
@harmanpreet_13
அமன் ஷெராவத்: மல்யுத்தத்தில் 57 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளி கணக்கில் போர்டோரிகோ வீரர் டேரியன் குருசை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
@amansehrawat057
ஸ்வப்னில் குசாலே: துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.