இந்தியாவின் தேசிய விலங்கான புலி பற்றிய சுவாரசிய தகவல்கள்!

இந்தியாவின் தேசிய விலங்கான புலி, பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும்.
பாந்தெரா எனும் பெரும்பூனை இனத்தில் புலியுடன் சிங்கம், சிறுத்தை, ஜாகுவார் மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவையும் அடங்கியுள்ளது.
பொதுவாக புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை. ஒரு புலியின் எல்லைக்குள் மற்றொரு புலி நுழையாது.
புலிகள் பகலை விட இரவில் சுறுசுறுப்பாக இருக்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கின்றன
ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம்.
புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை புலிகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளாகும்.
கருணை, வலிமை, சுறுசுறுப்பு மற்றும் மகத்தான சக்தி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது.
காடுகளில் வாழும் புலியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
புலிகள் நன்றாக நீந்த வல்லவை, இவை குறிப்பாக வெப்பமான நாட்களில் பெரும்பங்கை நீர்நிலைகளில் கழிக்கின்றன