சர்வதேச நட்பு தினம் 2024: வரலாறு, நட்பின் முக்கியத்துவம்..!
1958 -ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் அமைப்பு உலக நட்பு அறப்போர் நாடுகளுக்கு இடையே நட்பை உருவாக்கவே, சர்வதேச நட்பு தினம் கொண்டாட முன்மொழிந்தது.
2011- ம் ஆண்டில், ஐ.நா. பொதுச் சபை சர்வதேச நட்பு தினத்தை நட்பு, கலாச்சாரங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை கொண்டாடும் நாளாக அறிவித்தது.
ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு.
நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு உறவு தான் நட்பு, எது, சரி தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் நம்மோடு தோள் நிற்கும் ஒரு உறவு தான் நட்பு.
இந்த நாள் சிறப்பு உறவுகளை மதிப்பதற்கும் நிபந்தனையின்றி நம்முடன் எப்போதும் இருக்கும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நினைவூட்டலாகும்.
நட்பு தினம் கொண்டாட்டமானது, நண்பர்களுக்கு பரிசுகள் வழங்கவது, சமூக வலைதளங்களில் நினைவு புகைப்படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.