உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக் கீரை சொதி?

உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக் கீரை சொதி?

Published on
அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். இன்று அகத்திக்கீரையில் சொதி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : அகத்திக் கீரை, பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் பால்,உப்பு, மஞ்சள்பொடி, கறிவேப்பிலை ஆகியவை.
கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.
அதில் உப்பு, மஞ்சள் துள் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பாலை ஊற்றுங்கள்.
பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com