கர்ப்பிணிகள் பார்லி தண்ணீரை குடிக்க வேண்டும். இதை குடிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
பெண்கள் பார்லி தண்ணீர் குடிக்க வேண்டிய ஒன்று. இதன்முலம் சிறுநீர் தொற்று போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் பாதுகாக்கலாம்.
பார்லி தண்ணீரில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பை பிணைத்து உடலில் இருந்து நீக்கி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
பார்லி தண்ணீரில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.
பார்லி தண்ணீரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
பார்லி நீரில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
தினமும் பார்லி தண்ணீரை குடித்து வந்தால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும் என்ற மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து ,வயிற்று சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.
பார்லி தண்ணீரை அளவுக்கு மீறி குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அளவுடன் எடுத்துக்கொள்ளலாம்.