பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
கேள்வி : நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் தானா?
பதில் : நிச்சயமா அவசியம் தான். ஏன்னா சில கதைக்கு கவர்ச்சி கூட தேவையா இருக்கும்.கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் கண்ணுக்கு தெரியாமல் போயிடும்.ஒரு பொண்ணு அழகா இருந்தா, அதை கொண்டாடணும்ங்க... இதுல என்ன தப்பு இருந்துட போகுது.
@therealandreajeremiah
கேள்வி : நீங்கள் பாடியதிலேயே உங்களுக்குப் பிடித்த பாடல் எது?
பதில் : `கோவா' படத்தில் வரும் `இதுவரை இல்லாத உணர்விது...' பாடல் தான்.
@therealandreajeremiah
கேள்வி : நடித்ததில் பிடித்த நடிகர் யார்?
பதில் : கமல்ஹாசனும், கார்த்தியும் தான். `விஸ்வரூபம்', `ஆயிரத்தில் ஒருவன்' என்னால் மறக்கவே முடியாத மூவிஸ்.
@therealandreajeremiah
கேள்வி : திருமணம் எப்போது? என்ன ஐடியா வைத்திருக்கிறீர்கள்?
பதில் : ஐடியா எதுக்குங்க... கல்யாணத்துக்கு ஒரு நல்ல ஆம்பள தான் வேணும். நேர்மையான நல்ல ஆளு கிடைக்கட்டும். பார்க்கலாம். அப்படி ஏதும் ஆளு இருக்கா...இப்படி ஜாலியாக முடித்தார், ஆண்ட்ரியா.
@therealandreajeremiah