இரவில் இளநீர் பருகலாமா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இளநீர் பருகுவது பருவ கால நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.
இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன
இளநீர் அல்லது முற்றிய தேங்காய் தண்ணீர் பருகுவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் நிறைய இளநீர் குடிக்க வேண்டும். தேங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலை விரைவில் போக்குகிறது.
திரவ வடிவம் கொண்ட இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்கி நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு இளநீர் உதவும். மேலும் இந்த பானம் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லது.
தேங்காய் நீர் டையூரிடிக் என்று கருதப்படுகிறது. இது சிறுநீர் மூலம் உடலில் இருந்து அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் பானமாக செயல்படுகிறது.
மேலும் இளநீர் இதய நோய்களை தடுக்க உதவும். அந்த அளவுக்கு இதய ஆரோக்கியத்தில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.