தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது நல்லதா?
ஆரோக்கியமாக வாழ சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் எப்படி முக்கியமோ, அதேபோல் உடல் ஆரோக்கியத்துக்கு நீர் மிகவும் அவசியமானது ஆகும்.
உடல் சரியாக இயங்குவதற்கு தினசரி தண்ணீர் அவசியம்.
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் இரவு முழுவதும் நீரேற்றம் இருக்கும். இது உடலை சரியான வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால், நாள் முழுவதும் எதிர்கொண்ட அழுத்தத்தைப் போக்கும். மேலும் இரவு நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
தண்ணீர் குடிப்பதால் நமது வயிறு சுத்தமாவதுடன் செரிமான மண்டலம் சிறப்பாக வேலை செய்யும்.
தூங்கும் முன் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலில் புதிய செல்களை உருவாக்கும். மேலும் தசைகளும் வலிமை பெறும்.