யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது..!
அஜீரண கோளாறு இருப்பவர்கள் தங்களது உணவில் நெய் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு எதிர் வினையை உண்டாக்கக்கூடும்.
சளி மற்றும் இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போது நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது பிரச்சினையை அதிகரிக்க செய்யும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு உப்புசம் ஆவது, அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்சினையை சந்திக்கும்போது நெய் சாப்பிடும் அளவை குறைப்பது நல்லது.
கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்கள் நெய் எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.