ஆடி மாதம் வந்தாச்சு..கூழ் எப்படி செய்யலாம்னு பாக்கலாமா?
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி அல்லது கேப்பை மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு, கரைத்து வைத்த ராகி அல்லது கேப்பை மாவை ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். ஒரு பத்து பதினைந்து நிமிடம் அப்படியே கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும். வாசனை வந்ததும் அடுப்பினை அணைத்து விட வேண்டும்.
அவற்றுடன் தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை போன்றவை சேர்த்து பறிமாறிக்கொள்ளலாம்.