பொரித்த உணவுகளை சாப்பிட்ட பின் என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது தெரியுமா?

பொரித்த உணவுகளை சாப்பிட்ட பின் என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது தெரியுமா?

Published on
எண்ணெய் மிகுந்த உணவு சாப்பிட்ட பிறகு உங்களது வழக்கத்தில் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளுங்கள். பிளவனாய்டுகள் நிறைந்த கிரீன் டீ செரிமான அமைப்பில் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.
எண்ணெய் மிகுந்த உணவு சாப்பிட்ட பிறகு தூங்குவதை தவிர்த்து விடுங்கள். உணவு உண்ட பிறகு தூங்கினால் கொழுப்பு உடலில் படிந்து, அதனால் பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான நீர் குடிக்கும்போது கெட்ட கொழுப்புகள் படிவது தடுக்கப்படும்.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு நட்ஸ் மற்றும் விதைகளைச் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள், எண்ணெய் உணவு கொழுப்பு கழிவுகளை வெளியேற்ற உதவி செய்யும்.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளுடன் பால் சேர்த்த டீ குடிப்பது அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் உண்டாக்கும். எனவே தவிர்ப்பது நல்லது.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடக் கூடாது. இது செரிமான அமைப்பில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கி அசவுகரியத்தை ஏற்படுத்தலாம்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நேரம் நடப்பது நல்லது. நடைப்பயிற்சி செய்தால் ஜீரணம் எளிதாகும். அசிடிட்டி போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com