வெல்ல சீடை நினைத்தாலே நாக்கில் எச்சி ஊறும்... இதை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம் வாங்க..!
தேவையான அளவு அரிசி மாவு, வெல்லம், எண்ணெய், ஏலக்காய் பொடி, உளுத்தம்பருப்பு , வெள்ளை எள் போன்றவை..
உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு காய்ச்சவும்.
இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். வெல்லம் பாகு பதம் அல்லாமல் நன்கு கரைந்தபிறகு இறக்கி விடவும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு அதில் வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.
அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த வெல்ல சீடை தயார்.