செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா..?நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்...?
செல்லப் பிராணிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு நோய் வராமல் தடுக்க தவறாமல் தடுப்பூசி போடவேண்டும்.
செல்லப் பிராணிகளை வளர்ப்போரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
செல்லப் பிராணிகளுடன் விளையாண்டு முடித்த பிறகு கை,கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
செல்லப் பிராணிகளின் முகத்தின் அருகில் நின்று கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.
செல்லப் பிராணிகளுக்கு ஏதேனும் நோய் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்
செல்லப் பிராணிகள் வளர்க்கும் வீட்டில் அனைவரும் நகங்களை அவ்வப்போது வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ப்புப் பிராணிகளிடையே அதிகமாக விளையாட கூடும்.அதனால் குழந்தைகளின் சுத்தத்தை பெற்றோர்கள் பேண வேண்டும்.