கொரிய மக்களின் வாழ்வியல் முறைகள்!
பார்லி தேநீர் : 'போரி சா' எனப்படும் பார்லியில் தயாராகும் தேநீர் கொரியாவின் பிரபலமான பானமாகும். இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், செரிமானம் சுமுகமாக நடைபெறவும் உதவும்.
உடல் செயல்பாடு : கொரியர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
சரும பராமரிப்பு : கொரியர்கள் சரும பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமத்தில் படியும் மாசுக்களை நீக்குவது, இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்வது, ஈரப்பதத்தை தக்க வைப்பது, சூரிய ஒளிக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது என சரும நலனில் அக்கறை கொள்வார்கள்.
சமச்சீர் உணவு : கொரிய உணவுகளில் காய்கறிகள், சத்து குறைந்த புரத உணவுகள் மற்றும் கிம்ச்சி போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன.
உணவு சாப்பிடும் முறை : கொரியர்கள் நிதானமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். சாப்பிடும் சமயத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டார்கள்.
காலை உணவின் முக்கியத்துவம் : கொரியர்கள் ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்கமாட்டார்கள். பெரும்பாலும் சத்தான, சமச்சீரான காலை உணவை உட்கொள்கிறார்கள்.