பெண்களே வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!

all photo using metaAI
நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை. பெண்கள் வீட்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்று பார்க்கலாம்.
கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்.
பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்.
வரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். பர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள்,அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்
பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள்.
தோட்டம், முற்றம், கார் ஷெட் ஆகிய இடங்களை கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்
லைட், பேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்.
ஷெல்புகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிபோடுங்கள்.
Explore