நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...!
சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஹாய் நான்னா' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் "நான் நடித்த சீதாராமம், ஹாய் நான்னா போன்ற காதல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.
மேலும் என்னை ரசிகர்கள் 'ரொமான்ஸ் குயின்' என அழைப்பதால் சந்தோஷம் அடைகிறேன். இந்தியில் காதல் படங்களில் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.