சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் லெமன் ஜூஸ்..!
இதில் வைட்டமின் சி, கால்சியம், போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் நிறைந்து காணப்படும்.
எலுமிச்சையில் அதிக வைட்டமின் சி காணப்படுகிறது. இது ப்ரீ ரேடிக்கல்ஸை சேதப்படுத்தாமல் செல்களை பாதுகாக்க உதவுகிறது.
இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது.
லெமன் ஜூஸ் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
இது சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரித்து, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸ் சிறுநீரில் உள்ள சிட்ரேட்டின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை தடுக்கிறது.
எலுமிச்சை ஜூஸ் நார்ச்சத்து நிறைந்தது. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது நோய்த்தொற்றுகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
வெயிலின் தாக்கத்தால் அதிக நீர்ச்சத்து இழப்பு ஏற்படக்கூடும். இதனால் தொண்டை வறட்சி காணப்படும். இதனை தவிர்க்க எலுமிச்சை ஜூஸ் மிகச்சிறந்த தேர்வாகும்.