குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடும் மழலைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
குழந்தைகள் தினம் : இன்று (நவம்பர் 14-ந் தேதி) முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தினார். குழந்தைகளுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பல்வேறு வழிகளில் சுட்டிக்காட்டினார்.
அவரை குழந்தைகள் 'நேரு மாமா' என்றே அழைக்கிறார்கள். அதனால் அவரது மறைவுக்குப் பின், அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகளை கொண்டாடுவதுடன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளின் பிரியமான நேரு மாமாவுக்கு அரசியல் கடந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நாளில் குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகள் தின வாழ்த்துகள் : என் குழந்தைகளின் வாழ்க்கையை அன்பு, பொறுமை மற்றும் வேடிக்கையான நேரங்களால் நிரப்ப நான் உறுதியளிக்கிறேன்.
கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் உருவில் இறைவனை பார்க்கலாம்..குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
இரவில் வானில் தெரியும் நட்சத்திரம் போன்று எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்...குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.