உறுப்பு தானம் அறிவோம்..!

உறுப்புதானம் என்பது மனித இனத்திற்கே கிடைத்த ஒரு பெரும் வரம் ஆகும்.
ஒருவரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு உறுப்பு செயலிழந்து விட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்பது, மருத்துவத்துறையின் மிகப்பெரிய சாதனையாகும்.
ஒருவரிடம் இருந்து பெறப்படும் உறுப்புதானம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
உறுப்புதானம் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்றிவிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஏனென்றால் அதற்கு மேல் பொருத்தப்படும்போது, அந்த உறுப்புகள் செயல்படும் திறனை இழந்துவிடுகின்றன.
உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை எவ்வளவு நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்?:
சிறுநீரகம் : 48-72 மணி நேரம் வரை
கல்லீரல் : 12-18 மணி நேரம் வரை
இதயம் : 5 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) : 10 நாட்கள் வரை
இதயம் / நுரையீரல் : 5 மணி நேரம் வரை
கணையம் : 8-12 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) : 10 நாட்கள் வரை
குடல் : 8 மணிநேரம்
தோல் : 5 வருடமும், அதற்கு மேலும்
எலும்பு : 5 வருடமும், அதற்கு மேலும்