லுக்கா, ஸ்டைலா, மாஸா🤘… எல்லாத்துக்கும் ஒரே டான் — ரஜினி!

கர்நாடகாவில் கண்டக்டராக சுற்றிக்கொண்டிருந்த சிவாஜிராவை, ரஜினிகாந்தாக பட்டை தீட்டி திரையுலகுக்கு அழைத்து வந்து, அதன் கதவுகளைத் திறந்து விட்டவர், இயக்குனர் கே.பாலசந்தர்.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி வெளியான 'அபூர்வ ராகங்கள்' படமே ரஜினிகாந்தின் திரைப்பயணத்தின் திறவுகோல்.
இன்று தமிழில் ஏன் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
1978-ல் ஒரே ஆண்டில் 21 படங்கள் நடித்து மக்களின் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றவர்.
ரஜினியின் நூறு கோடியை முதலில் தொட்ட படம் 'சிவாஜி'. 'படிக்காதவன்', 'அண்ணாமலை', 'தளபதி' என அனைத்தும் அந்தந்த வருடத்தின் வெற்றிப்படங்களில் முதலிடம் வகித்தன.
கூலி' (ரூ.538 கோடி வசூல்) படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த 'ஜெயிலர்-2' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சாதனைகளின் சிகரமான ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தனது வாழ்நாளில் 75-வது ஆண்டில் அடியெடுத்தும் வைக்கிறார்.
இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
Explore