தாஜ்மஹால், ஆக்ரா: 'இந்தியாவின் பளிங்கு அற்புதம்' என்று வர்ணிக்கப்படும் தாஜ்மஹால், முகலாய கட்டிடக்கலையின் சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாகும்.
தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக 1631-முதல் 1648-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஷாஜஹானால் இது கட்டப்பட்டது.
கிசா பிரமிடுகள்: எகிப்தின் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பிரமிடுகள் இதுவாகும்.
பிரமிடுக்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் சிறிய சுரங்கப் பாதைகள் இருக்கின்றன. கிசா பிரமிடுக்கு அருகே இன்னும் 2 பிரமிடுகள் இருக்கின்றன.
ஹுமாயூன், டெல்லி: முகலாய பேரரசர் ஹுமாயூன் நினைவிடம் 1570-களில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் தோட்ட கல்லறையாகும். இது டெல்லியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
150-க்கும் மேற்பட்ட முகலாய குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருப்பதால் இந்த இடம் 'முகலாயர்களின் தங்குமிடம்' என்றும் அழைக்கப்படுகிறது.
ஷா-இ-ஜிந்தா, உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் அமைந்துள்ள பிரபலமான நினைவிடங்களில் இதுவும் ஒன்றாகும். ஷா-இ-ஜிந்தா என்றால் வாழும் ராஜா என்று பொருள்.
முஹம்மது நபியின் உறவினரான குத்தம் இப்னு அப்பாஸ் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நினைவிடம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமாக விளங்குகிறது.