தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணங்கள்!

அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
வறண்ட கூந்தலை உடையவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.
போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.
வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்.
உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்!