சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து மாங்கொட்டை பருப்பு..!
மாங்கொட்டையின் பருப்பில் வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், மற்றும் ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தின் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
இது கல்லீரல் மற்றும் சிறுங்குடலில் உள்ள நொதிகளை மாற்றி குளுக்கோஸ் ரத்தத்தை உறிஞ்சுவதை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
மாம்பழ கொட்டையின் பருப்பு ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் பருமனையும் குறைக்கிறது.
இதனால் இன்சுலின் அளவு திறம்பட செயல்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.