தேவையான பொருட்கள் : உளுந்து, பச்சை மிளகாய், அரிசி, பொட்டுக் கடலை வறுத்தது, உப்பு, எண்ணெய் ஆகியவை.
செய்முறை :உளுந்து மற்றும் அதோடு அரிசி, வறுத்த பொட்டுக் கடலை ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் 1 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து அதோடு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும்.
பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் மிளகும் இடித்து போடுவார்கள். தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளுங்கள்)
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உறுதி செய்ய சிறு துளி மாவை போட்டுப் பாருங்கள். உப்பி பொறிந்து வந்தால் எண்ணெய் ரெடி.
அடுத்து உள்ளங்கையில் தண்ணீரில் நனைத்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து தட்டுங்கள். வடை போல் வட்டமாக தட்டியதும் நடுவே ஒரு ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.
கையில் வரவில்லை எனில் பால் கவர் அல்லது வெற்றிலை, வாழை இலை பயன்படுத்தி தண்ணீர் தொட்டு வடை தட்டி கடாயில் போட்டால் நழுவிக்கொண்டு விழும். பின் அதை பொன்னிறமாக வறுத்து எடுங்கள். அவ்வளவுதான் மெது வடை தயார்.