அதிசய குணம் உள்ள உயிரினங்கள்...!
சாலமண்டர்: வால்களை மீண்டும் வளர்க்கும் பண்பை பெற்றுள்ளன.
மெக்சிகன் டெட்ரா: இதய திசுக்களை மீண்டும் உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.
ஆக்சோலோட்கள்: உடலின் எந்த பாகத்தை இழந்தாலும் இவற்றால் மீண்டும் உருவாக்கிக்கொள்ளும்.
சுறா மீன்: உடல் பாகங்களை மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் தங்கள் பல் அமைப்புகளை மீண்டும் உருவாக்கும் தன்மை கொண்டது.
நட்சத்திர மீன்: இவற்றால் புதிய கால்களை மீண்டும் வளர்ப்பது மட்டுமல்லாமல், இழந்த கால்களில் இருந்து ஒரு புதிய உடலையும் வளர்க்க முடியும்.
பச்சோந்தி: இவை நிறம் மாறும் திறன் கொண்டவை. இவற்றால் வால் மற்றும் கை, கால்களை மீண்டும் உருவாக்க முடியும்.
தட்டை புழு: இந்த புழுக்களை உடலின் நடுவில் வெட்டினால், ஒவ்வொரு பாதியும், அதன் மீதி பாதியை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.