இங்கிலாந்தில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி 94 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
Instagram:missenglandofficial
தற்போது அங்கு 94-வது ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடந்து வருகிறது.
Instagram:missenglandofficial
இந்த நிலையில் இந்த போட்டியில் லண்டனை சேர்ந்த 20 வயதான மெலிசா ராவ்ப் என்கிற அழகி ஒப்பனையே (மேக்அப்) இல்லாமல் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார்.
Instagram: melisaraouf
மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
Instagram: melisaraouf
கல்லூரியில் அரசியல் படித்து வரும் அவர் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் 40 பெண்களுடன் போட்டியிடுகிறார். அந்த போட்டியிலும் ஒப்பனை இல்லாமல் கலந்து கொள்ள போவதாக அவர் கூறியுள்ளார்.
Instagram: melisaraouf
எனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைத்தளங்களில் அழகு குறித்து முன்வைக்கப்படும் கூற்றுகளை மாற்றவும் போட்டியில் ஒப்பனை இல்லாமல் கலந்து கொண்டேன்.
Instagram: melisaraouf
பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள்.
Instagram: melisaraouf
நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம்.