3வது முறையாக பிரதமராகிறார் மோடி..!
நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலை அமைந்தது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்நிலையில், மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழா வரும் 9ம் தேதி மாலை நடைபெற உள்ளது.