பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி..!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் ஆட்சியமைக்கிறார் மோடி.
இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பல்வேறு அண்டை நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நாட்டின் புதிய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார்.
அவரை தொடர்ந்து பல்வேறு மத்திய மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.