குரங்கம்மை: அறிகுறிகளும்.. தடுப்பதும்..!
குரங்கம்மை : இது வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்தொற்று.
குரங்கம்மையின் அறிகுறிகள் : காய்ச்சல், முகம், கைகள், கால்கள், கண்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் கொப்புளங்களுடன் கூடிய கடுமையான தோல் வெடிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.
காய்ச்சல் ஏற்பட்ட முதல் 3 நாட்களுக்குள் சொறி உணர்வு ஏற்படக்கூடும். முதலில் வாய், நாக்கு பகுதியில் புண்கள் தோன்றும்.
பின்னர் முகத்தில் சொறி உணர்வு தோன்றி 24 மணி நேரத்திற்குள் கைகள், கால்கள் என உடலில் மற்ற பகுதிகளுக்கு பரவி கொப்புளங்களாக மாறும்.
4, 5-வது நாளில், கொப்புளங்கள் பெரிதாகிவிடும். 2-வது வார முடிவில், அவை உலர்ந்து விடும்.
மேலும் கடுமையான உடல் பலவீனம், தலைவலி, தசை வலி, உடல் வலி, முதுகுவலி, தொண்டை புண், இருமல், வியர்வை, உடல் குளிர்ச்சி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
குரங்கம்மை தடுப்பது : நோய் பாதிப்புக்குள்ளான அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும்.
நோயாளியுடன் தொடர்பில் இருக்கும் படுக்கை, பாத்திரங்கள் போன்ற எந்தவொரு பொருளையும் தொடுவதை தவிர்க்கவும்.