மழைக்கால ஆரோக்கியம்: சளி, இருமல் தீர எளிய வீட்டு வைத்தியம்..!
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பல்வேறு காரணிகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
மழைக்காலத்தில் பலருக்கு சளி, இருமல் பாடாய் படுத்தும்.
சளி இருமலை போக்க, டாக்டரிடம் செல்லாமல், உணவு முறையில் சில மாற்றங்கள் செய்தால் போதும்
முற்றிய வெண்டைக்காய் மற்றும் தக்காளியில் சூப் செய்து அருந்தினால் இருமல், ஜலதோஷம் விலகும்.
மணத்தக்காளி சூப்பினை சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் விலகும்.
இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சளி பாதிப்பு குறையும்.
சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடுவது நல்லது.
சுண்டகாய் வத்தலை வறுத்துப் பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளித் தொந்தரவுகள் விலகும்.
மாலை வேளைகளில் சுக்கு காபி அருந்துவது நல்லது.
மாலை நேரச் சிற்றுண்டியாக எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூண்டுப்பால் அருந்துவது நல்லது.