சுவையும் மனமும் மட்டுமில்ல..மருத்துவ குணங்களும் நிறைந்தது.!!

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு.
கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
கடுகில் உள்ள நியாசிசன் (வைட்டமின் பி3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்
இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவுகின்றன.
கடுகு ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.
இதில் உள்ள சில உட்பொருள்கள் கேன்சர் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
இதில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வலுவிழந்த முடி உடைந்து காணப்படுபவர்களுக்கு இது சிறந்தது.
Explore