தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Instagram: wikkiofficial
இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடந்தது.
Instagram: nayantharaofficiial
திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டனர். ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள்.
Instagram: nayantharaofficiial
அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ‘ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.
Instagram: nayantharaofficiial
அதேபோல செஸ் ஒலிம்பியாட் தொடக்க மற்றும் நிறைவுவிழா பணிகளில் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
Instagram: wikkiofficial
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர்.
Instagram: nayantharaofficiial
அதன்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி 10 நாட்கள் பயணமாக ஸ்பெயினுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
Instagram: nayantharaofficiial
‘இது 2-வது தேனிலவு பயணமா? சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்', என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram: nayantharaofficiial
வெளிநாடு பயணம் முடிந்த பின்னர் ‘ஜவான்' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பங்கேற்க இருக்கிறார்.
Instagram: nayantharaofficiial
அதேபோல அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட உள்ளார்.
Instagram: nayantharaofficiial