நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா..
தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோடும் வீதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.