பெரும்பாலான மக்களின் கவலையை அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சினை!

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாகப் புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.
காலை உணவைத் தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும். மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.
முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.
காலை உணவாக முழு தானியங்கள், பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது.