ஒரு நாள் கிரிக்கெட் : அதிக சிக்சர் அடித்த டாப்-5 வீரர்கள்!
ஒரு நாள் போட்டியில் 1971-ம் ஆண்டு முதல் முறையாக சிக்சர் அடிக்கப்பட்டது.
ரோகித் சர்மாவுக்கு முன்பாக அதிக சிக்சர் அடித்த சாதனை மொத்தம் 18 வீரர்களிடம் மாறியிருக்கிறது.
கடைசியாக அப்ரிடியிடம் இச்சாதனை 2010-ம் ஆண்டில் சென்றது. அவர் சிக்சர் மன்னர் அரியணையில் 5,641 நாட்கள் இருந்துள்ளார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதன்முலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது முதல் இடத்தில் உள்ளார்.