ஒரு குண்டா சோறுக்கு ஒரு கரண்டி வத்தக்குழம்பு..செய்வது எப்படி?
தேவையான அளவு சுண்டைக்காய் வத்தல், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், வெந்தயம், கடலைப்பருப்பு, மிளகாய் தூள், புளி, நல்லெண்ணெய்.
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
கடாயில் சிறிதளவு கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்தது, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த சுண்டைக்காய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
மிளகாய் தூள் சேர்த்து கிளறி அதில் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி புளி கரைசலை சேர்க்க வேண்டும்.
மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் குழம்பு கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கி வைக்கவும்
சூப்பரான டேஸ்டியான நம்ம விட்டு வத்தக்குழம்பு தயார்.