அலுவலக பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் மேஜை பகுதியை அழகூட்டுவதற்கு உள் அலங்கார செடிகளையும் பயன்படுத்தலாம். அவை மேஜைக்கு அழகு தருவதோடு பணி சூழலுக்கும் இதமளிக்கும்.
ஜேட்: போன்சாய் மர செடிகளை போலவே காட்சியளிக்கும் இவை அளவில் சிறியவை.
இந்த செடி சிறிய இலைகளையும் கொண்டவை, அதிர்ஷ்ட செடியாக கருதி பலரும் வளர்க்கிறார்கள்.
பைகஸ்: அறையில் நிலவும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
மேலும் காற்றில் கலக்கும் மாசுகளை குறைக்கும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது.
பிட்டோனியா: மொசைக் கற்களை போல் கவர்ச்சியான தோற்றம் கொண்டிருக்கும்.
இதன் வளர்ச்சிக்கு குறைந்த வெளிச்சமே போதுமானது. இலைகளின் பிரகாசமும், வண்ணமும் மேஜைக்கு அழகூட்டும்.
பெர்ன்: அறைக்குள் நிலவும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இது கண்களுக்கு குளிர்ச்சி தரும் வசீகர அழகு கொண்டது.