பல நன்மைகளை அள்ளித்தரும் பனங்கற்கண்டு..!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு, பல நன்மைகளை அளிக்கிறது. இதைப்பற்றி பார்ப்போம்.
இதில் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது
பனங்கற்கண்டில் உள்ள மெக்னீசியம், மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வு உணர்வை ஊக்குவிக்கவும் உதவக்கூடும்.
பனங்கற்கண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கலை போக்குகிறது.
பனங்கற்கண்டில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பனங்கற்கண்டில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
பனங்கற்ண்டில் கால்சியம், மெக்னீசியம் அதிகம் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான உடல் எடைக்கு பனங்கற்கண்டு சிறந்த தேர்வாகும்.
வாரத்துக்கு இரண்டுமுறை பனங்கற்கண்டு சாப்பிட்டுவந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சினை குணமாகக்கூடும்.