பாலிவுட்டில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்'..!

பாலிவுட்டில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்'..!

Published on
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள்.
இப்படத்தில் கதாநாயகனாக கதிரும் கதாநாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர்.
சாதி பிரச்சினையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. இப்படத்திற்கு தடக் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com