ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார்..!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு கடந்த 12ம் தேதி அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
நிலையில், இன்று துணை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்ற பவன் கல்யாண் கோப்புகளை கையெழுத்திட்டு ஆந்திராவின் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.