கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியவர்கள்..!

நம்மில் பலருக்கு கத்திரிக்காய் பிடிக்கும். ஆனால், சிலர் இதை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.
அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அழற்சி இருக்கும் போது சாப்பிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும்.
ரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் கத்திரிக்காய் அதிகமாக உட்கொள்கிறீர்கள் எனில் ரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே தவிர்ப்பது நல்லது.
கத்திரிக்காய் வாயுவை உருவாக்கும் என்பதால், செரிமானத்தை மோசமான நிலைக்கு மாற்றக்கூடும்.
மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. அதை மீறுவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
கத்திரிக்காயில் தீங்கு விளைவிக்கும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் இவை பித்தப்பையில் கல் உருவாக காரணமாக அமையும்.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.அவை மூல நோயை அதிகப்படுத்தும் தன்மைக்கொண்டது.
கத்திரிக்காய் கண்களில் எரிச்சல் மற்றும் தொற்று போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும்.