கோலாகலமாக நடைபெறும் மகா கும்பமேளாவின் புகைப்படங்கள்!

@afp

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பது இந்த கும்பமேளாவுக்கு கூடுதல் சிறப்பு.

@afp

இது பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

@afp

கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

@afp

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

@afp

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் இந்த மகா கும்பமேளாவுக்கு கோடி கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

@afp

அதிகமான மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது.

@afp

கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாள் 1 கோடி பேர் நீராடியுள்ளனர்.

@afp

ஆளில்லா விமானங்கள் உதவியுடன் காவல் நிர்வாகம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. நீருக்கடியிலும் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது.

@afp