வெயிலுக்கு ஏற்ற அன்னாசிப்பழம்..!

அன்னாசிப்பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. இது நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்கக்கூடும்.

அன்னாசிப்பழத்தில் உள்ள குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்தக் கோளாறுகளை அன்னாசிப்பழம் விரைந்து குணமாக்கும் திறன்கொண்டது.

அன்னாசியில் புரதம் அதிகமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அன்னாசிப்பழம் உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது.

சிறுநீரகக் கற்களை கரைக்கும் திறன்கொண்டது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அன்னாசிப்பழம் சிறந்து விளங்குகிறது.

அன்னாசிப்பழம் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திறன் வாய்ந்தது.

அன்னாசிப்பழத்தை கர்ப்பிணி பெண்கள், மூல நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.