தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.

Instagram: hegdepooja
தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Instagram: hegdepooja
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
Instagram: hegdepooja
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார்.
Instagram: hegdepooja
அந்த சமயம் 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது.
Instagram: hegdepooja
இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார்.
Instagram: mrunalthakur
சமீபத்தில் திரைக்கு வந்த 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மிரினல் தாக்கூருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
Instagram: mrunalthakur
இந்நிலையில், ''அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன். இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம் தான்'' என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Instagram: hegdepooja