புது பேஷன் உடையில் பிரியா வாரியர்...!!!
‘ஒரு அடர் லவ்’ மலையாள படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் பிரியா வாரியர்.
அந்த படத்தில் புருவத்தை உயர்த்தி கண்ணால் காதலை தெரிவிக்கும் காட்சி ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது.
2018-ம் ஆண்டில் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் பிரபலமாக இருந்தவர், பிரியா வாரியர்.
இவர் மலையாளம் தாண்டி கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் இவரது ‘புரோ' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் ஒரு பட விழாவில் பிரியா வாரியர் அணிந்திருந்த பேஷன் உடை பார்வையாளர்களை ஈர்த்தது.
இவர் அணிந்திருந்த உடையை பார்த்து பலர் விமர்சனமும் செய்து வருகிறார்கள்.