மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமார் பெயர்?
பெங்களூரு கொட்டிகெரே-நாகவாரா இடையே மஞ்சள் நிறப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள பாட்டரி டவுன் மெட்ரோ நிலையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க கோரிக்கைகள் எழுந்தன.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், முதல்-மந்திரி சித்தராமையா, மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக பாட்டரி டவுன் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமாரின் பெயரை வைக்க பரிசீலனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.