வளமான வாழ்வு தரும் புரட்டாசி மாத ராசி பலன்கள்..

உழைப்பின் மூலமே உன்னத வாழ்வை அடைய முடியுமென்று சொல்லும் மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்திலும், விரயாதிபதி குரு விரய ஸ்தானத்திலும் இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும்.
இம்மாதம் நவராத்திரி நாட்களில் பராசக்தியை வழிபட்டால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் உன்னத குணம் பெற்ற ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் ‘புத சுக்ர யோகம்’ ஏற்படுகிறது. எனவே பொருளாதார விருத்தி அதிகரிக்கும்.
இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.
எவரையும் பார்த்தவுடன் பேச்சாற்றலால் கவர்ந்திழுக்கும் மிதுன ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து ‘புத-சுக்ர யோக’த்தை உருவாக்குகிறார். எனவே எதிர்பாராத விதத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.
வேகமும், விவேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் விரய ஸ்தானத்திலும், விரயாதிபதி புதன் தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.
தெருவில் செல்லும் பொழுது கும்பிட்டுப் பேசுபவர்களாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே தனாதிபதி புதனும், தன ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும், அபிராமி அம்மன் வழிபாடு ஆனந்த வாழ்வு தரும்.
அமைதியாக இருந்து கொண்டு அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே! குடும்ப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருக்கிறார். 8-ல் ராகு சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கும்.
இம்மாதம் சூரிய பகவான் வழிபாடு காரிய வெற்றி தரும்.
மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை மனதில் பதித்து வைத்துள்ள துலாம் ராசி நேயர்களே!மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரயாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், செலவு இருமடங்காகும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்க நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே நிதிநிலை உயரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
இம்மாதம் சரஸ்வதி வழிபாட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும்.
யாரையும் சந்தித்த உடனேயே நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருவும், தனாதிபதி சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.
எதையும் ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப சிறப்பாக செயல்படும் மகர ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் புதனும், சுக்ரனும் இருக்கிறார்கள். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
இம்மாதம் நரசிம்மர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.
எடுத்த கொள்கை மாறாமல் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் கும்ப ராசி நேயர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனியும், தன-லாபாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றனர். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
உணர்வுகளை மதிக்கும் உன்னதமான குணம்பெற்ற மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். வக்ரச் சனியின் பார்வையும், உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தடை, தாமதம் அதிகரிக்கும்.
இம்மாதம் தட்சிணாமூர்த்தி வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.